காணொளி: திருவண்ணாமலையில் கோவில் இடுக்கில் சிக்கியவர் உயிரிழப்பு
காணொளி: திருவண்ணாமலையில் கோவில் இடுக்கில் சிக்கியவர் உயிரிழப்பு
பிரசுரிக்கப்பட்டது
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலில் தரிசனம் செய்யும் போது கோவில் இடுக்கில் சிக்கிய ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். போலீஸ் தெரிவித்த தகவலின்படி, உயிரிழந்த இந்த நபரின் பெயர் மணிக்குமார்.
ஜுலை 25ஆம் தேதி இந்த சம்பவம் நடந்திருக்கிறது. பிபிசி தமிழிடம் காவல்துறை தெரிவித்த தகவலின்படி, இடுக்கில் சிக்கியதும் உடன் இருந்தவர்கள் அவரை மீட்டிருக்கின்றனர். பின்னர், மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனை கொண்டு சென்றிருக்கின்றனர். ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பிரதே பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியாகாததால் இறப்புக்கான காரணம் முழுமையாக தெரியவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



