You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: அதிகாலை 3 மணிக்கு விழித்தால் உங்களுக்கு மீண்டும் தூக்கம் வரவில்லையா?
இரவில் தூக்கத்துக்கு நடுவே விழிப்பது பெரும்பாலும் தவறாக புரிந்துகொள்ளப்படுவதாக தூக்க நிபுணர்கள் கூறுகின்றனர்.
பெண்கள் தூக்கம் பாதிக்கப்படுவதை எதிர்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.... ஆனால் தூக்க நிபுணர் ஸ்டெஃபானி, இது உயிரியலை தாண்டிய ஒன்று என்று கூறுகிறார்.
"இரவில் தூக்கத்துக்கு நடுவே விழிப்பு வருவது மிகவும் பொதுவான ஒரு விஷயம். ஆனால், நாம் ஒரேகட்டமாக தொடர்ந்து தூங்க வேண்டும் என நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இரவில் முதல் பாதியில் நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். ஆழ்ந்த தூக்கத்திலிருந்து ஒருவரை எழுப்புவது மிகவும் கடினம்.
ஆனால், இரண்டாம் பாதியில் REM என அழைக்கப்படும் விரைவான கண் அசைவு தூக்கத்தில் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம், அதிலிருந்து ஒருவரை எழுப்புவது எளிதானது." என்று அவர் கூறுகிறார்.
தூக்கத்துக்கு நடுவே விழிப்பு வந்தால் அதற்கு எப்படி எதிர்வினையாற்றுகிறோம் என்பது முக்கியம்.
பெரும்பாலும் நமது செயல்பாடுகள், கவலைகள் மற்றும் சிந்தனைகள் மூலம் நாம் தூக்கத்தைத் தள்ளிப்போடுகிறோம். ஏனெனில், இவை உடல் வெப்பநிலையையும் இதயத் துடிப்பையும் அதிகரிக்கின்றன.
மீண்டும் தூங்குவதற்கு என்ன செய்யலாம்?
மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப உதவுவதற்காக, 15 நிமிடங்களுக்கு மேல் விழித்திருந்தால் உங்கள் படுக்கையை விட்டு எழுந்துவிடுங்கள்.
உங்கள் தூக்க முறையை சீராக வைத்துக்கொள்ள, தினமும் ஒரே நேரத்தில் எழுந்திருக்க முயற்சியுங்கள்.
சோர்வாக இருக்கும்போது உங்கள் படுக்கைக்கு செல்லுங்கள்… தூக்கப் பிரச்னைகள் தொடர்ந்தால், நிபுணரிடம் ஆலோசியுங்கள்.
முழு விவரம் காணொளியில்....
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு