காணொளி: ஆலமரத்துக்கு பிறந்தநாள் கொண்டாடிய பொதுமக்கள்

காணொளி: ஆலமரத்துக்கு பிறந்தநாள் கொண்டாடிய பொதுமக்கள்
பிரசுரிக்கப்பட்டது

மதுரை மீனாட்சிபுரம் செல்லூர் கண்மாய்க்கரை பகுதியில் பழமையான ஆலமரம் ஒன்று இருந்து வருகிறது. இந்த மரம் ஏராளமான பறவைகளின் வசிப்பிடமாக இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், ஆலமரத்தை காக்கும் விதமாக பிறந்த நாள் விழா என்ற பெயரில் நீர்நிலைபாதுகாப்பு இயக்கம் மற்றும் பொது நல அறக்கட்டளை சார்பில் கேக் வெட்டி கொண்டாடினர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு