காணொளி: தர்மேந்திர பிரதான் ராஜிநாமா - சிஜேபி நிர்வாகி தமிழில் கூறியது என்ன?

காணொளி: தர்மேந்திர பிரதான் ராஜிநாமா - சிஜேபி நிர்வாகி தமிழில் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடந்து வந்த போராட்டத்தைத் தொடர்ந்து ஜூலை 25ஆம் தேதி தர்மேந்திர பிரதான் பதவியில் இருந்து விலகினார்.

மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்தி வந்த போராட்டத்தை திரும்பப் பெறுவதாக காக்ரோச் ஜனதா கட்சி அறிவித்தது. செய்தியாளர்களிடம் பேசிய சிஜேபி செய்தித் தொடர்பாள சௌரவ் தாஸ் தங்களது கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

தமிழில் பேசிய அவர், "இந்தப் போராட்டத்தின்போது போடப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் திரும்பப் பெறப்படும், போராட்டக்காரர்கள் அல்லது சிஜேபி உறுப்பினர்கள் யார் மீதும் இனி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொருத்தமான (அதிகபட்ச) இழப்பீடு வழங்க அரசு ஒப்புக் கொண்டுள்ளது. தேர்வுச் சீர்திருத்தங்கள் குறித்து சிஜேபி சமர்ப்பித்த ஐந்து அம்சக் கோரிக்கைகளை பரிசீலிக்க அரசு ஒப்புக் கொண்டுள்ளது." என்று தெரிவித்தார்.

முழு விவரம் காணொளியில்...

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு