காணொளி: 'வெட்கப்பட வேண்டிய விஷயம்' - சோனம் வாங்சுக் வீடியோவில் வேதனை

காணொளி: 'வெட்கப்பட வேண்டிய விஷயம்' - சோனம் வாங்சுக் வீடியோவில் வேதனை
பிரசுரிக்கப்பட்டது

"நண்பர்களே.. சிறிது சோகம், சிறிது ஆச்சர்யம், சிறிது வேதனை, சிறிது கோபம் ஆகிய உணர்வுகளுடன் இந்த வீடியோவை பதிவு செய்கிறேன்" என்று சோனம் வாங்சுக் தனது காணொளியில் கூறியுள்ளார்.

மேலும் அதில், "26 நாட்கள் பசியுடன் இருந்து, 11 கிலோ எடை குறைந்து என் தசைகள் சிதைந்து, உடல் உறுப்புகளுக்கும் மூளைக்கும் சரிசெய்ய முடியாத அளவுக்கு சேதம் ஏற்படும் நிலை வரை சென்ற பிறகும், லடாக்கின் கடும் குளிரில் இருந்து டெல்லியின் கொளுத்தும் வெப்பம் வரை இந்தப் போராட்டத்தை நடத்திய பிறகும், இப்போது நான் யாரிடமாவது என் நற்பண்புக்கான சான்றிதழ் வாங்க வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், "என்னுடைய உண்ணாவிரதப் போராட்டம் எந்தளவுக்கு உண்மையானது? நான் என் உண்ணாவிரதத்தை முடித்திருந்தால் யாருடன் முடித்தேன்? ஏன் அவர்களுடன் முடித்தேன்? வேறு யாருடனும் ஏன் முடிக்கவில்லை? இதற்குப் பின்னால் என்ன ஒப்பந்தம்? என்ன உடன்பாடு? இத்தனை கேள்விகளுக்கும் நான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறதா?" என்று தெரிவித்துள்ளார்.

இன்று காலை முதலே பலர் தன்னை தொடர்புகொண்டு அல்லது சமூக ஊடகப் பதிவுகளை காட்டி, "உங்களைப் பற்றிப் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஏன் அவர்களுடன் உண்ணாவிரதத்தை முடித்தீர்கள்? ஏன் வேறு யாருடனும் முடிக்கவில்லை? இது என்ன ஒப்பந்தம்? என்ன உடன்பாடு?" என்று தன்னிடம் கேட்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதுகுறித்துத் தனது வீடியோவில் பேசியுள்ள சோனம் வாங்சுக், "உண்மையிலேயே இதற்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டுமா? இவ்வளவு திறமையான, அறிவாளிகள் நிறைந்த நாட்டில், இவ்வளவு சிறுமையான எண்ணங்கள் தோன்றுவது உண்மையிலேயே வெட்கப்பட வேண்டிய விஷயம்" என்று தெரிவித்துள்ளார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு