You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: தர்மேந்திர பிரதான் பதவி விலகியதை ஜந்தர் மந்தரில் கொண்டாடும் இளைஞர்கள்
மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகியதைத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராடி வந்த இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே பேசியபோது, "இந்த நாட்டின் இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால், யாரையும் தலை வணங்க வைக்கவும், அவர்களை ராஜிநாமா செய்ய வைக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
மேலும் "நாடு முழுவதும் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் அனைவரிடமும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இன்று மாலை 6 மணிக்கு, நீட் காரணமாக உயிரிழந்தவர்களுக்காக, அவர்களின் மரணத்திற்கு தர்மேந்திர பிரதானே பொறுப்பு எனக் கூறி, உங்கள் மாவட்டங்களில் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் பேரணியை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இது முதல் விக்கெட், நாம் இதோடு நிற்கப் போவதில்லை, இது வெறும் தொடக்கம்தான்," என்று கூறியுள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு